Monday, May 2, 2011

சங்க இலக்கிய வாசிப்பு - மலையாளம்

I

தமிழும் மலையாளமும்








மலையாள மொழி
வையாபுரிப்பிள்ளை
மலையாள மொழியின் தொடக்க நிலையில் உருத்திரியாத தமிழ்ச் சொற்கள் பலவும் உருத்திர்ந்தன சிலவும் வழங்கிவந்தன. இவ்வுருத்திரிபும் பெரும்பாலும் நாட்டின் இயற்கையமைதிக்கேற்ப மெல்லோசை தருதற்பொருட்டே நிகழ்ந்தது. பின்னர் மலையாளமொழி, தெலுங்கு, கன்னடம் முதலியவற்றைப் போல, வடமொழியோடு நெருங்கிய உறவு கொள்ளத் தொடங்கிற்று. வடமொழிச் சொற்கள் மிகுதியாக மலையாளத்தில் புகுந்தன. மிருது, கோஷம், முதலிய வடமொரியொலிகள் மேற்கொள்ளப்பட்டன. இத்தொடர்பினால் மலையாளம் தனது பூர்வ நிலையிலிருந்து பெரிதும் வேறுபாடு அடைந்தது.
• தமிழ் + சமசுகிருதம் = மலையாளம்
• தமிழ் முதன்மை


வள்ளத்தோள்
மலையாள வடிவம்
ஸம்ஸ்க்ருத பாஷதன் ஸ்வாபாவி கௌஜஸ்ஸும்
ஸக்ஷால்த் தமிழின்டெ மாதுர்யவும்
ஒத்து சேர்ந்நுள்ளொரு பாஷயாணென்பாஷ

தமிழ் மொழிபெயர்ப்பு
ஆற்றல் இயல்பாம் வடமொழியும் – அந்த
அழகுடை இனிய தீந்தமிழும்
வேற்றுமை இன்றிக் கலந்ததுவே – யான்
விரும்பும் எனது தாய்மொழியே

• சமசுகிருதம் + தமிழ் = மலையாளம்
• சமசுகிருதம் முதன்மை
மலையாள மொழியின் தோற்றம் அறிஞர்கள் கருத்து
கால்டுவெல் – தொடக்கம் (தமிழின் கிளைமொழி)
இதை மறுத்தல்
ஆதரித்தல்

இவற்றை ஐந்து பிரிவுகளில் அடக்கலாம்
1. சமசுதிருத்த்திலிருந்து மலையாளம் தனி மொழியாக வளர்ச்சியடைந்தது.
2. மூல திராவிட மொழியிலிருந்து ஏனைய தெலுங்கு, கன்னடம், தமிழ் ஆகியவை தோன்றியதைப் போல மலையாளமும் தனித்துத் தோன்றியது.
3. மலையாளம் தமிழின் கிளைமொழிகளுள் ஒன்றாக இருந்தது. அரசியல், பண்பாடு, புவியியல் காரணங்களினால் பிரிவுற்று, பின்னர்த் தனிமொழியாக உருவானது.
4. செந்தமிழின் வட்டார வழக்குகளில் ஒன்றான மலைநாட்டுத் தமிழும் சமசுகிருதமும் கலந்து மலையாளம் தனி மொழியாக உருவானது.
5. தென்திராவிட மொழியிலிருந்து கன்னடம், துளு, குடகு போன்ற மொழிகள் பிரிந்த பின்னர் சேரநாட்டை உள்ளிட்ட பண்டைத் தமிழகத்தில் வழங்கிய தமிழ் மொழியிலிருந்துதான் இப்போதிருக்கும் தமிழும் மலையாளமும் பிரிந்து தனித்தனி மொழிகளாக உருவாயின.
இவற்றில் யதார்த்தம் எது?





II

சங்க இலக்கியம் - சேரநாடு








சேரநாட்டு எல்லை

சேரநாடு எண்பது காதம்
சோழநாடு இருபத்துநான்கு காதம்
பாண்டியநாடு ஐம்பத்தாறு காதம்

சேரநாட்டு எல்லை
வடக்குத் திசைபழனி வான்கீழ்தென் காசி
குடக்குத் திசைகோழிக் கோடாம் – கடற்கரையின்
ஓரமோ தெற்காகு முள்ளெண் பதின்காதஞ் (80)
சேரநாட் டெல்லையெனச் செப்பு. (பெருந்தொகை 209)

சோழநாட்டெல்லை
கடல்கிழக்குத் தெற்குக் கரைபொருவெள் ளாறு
குடதிசையிற் கோட்டை கரையாம் – வடதிசையி
லேணாட்டுப் பண்ணை யிருபத்து நாற்காதஞ் (24)
சோணாட்டுக் கெல்லையெனச் சொல். (பெருந்தொகை 2093)

பாண்டிநாட்டெல்லை
வெள்ளா றதுவடக்கா மேற்குப் பெருவழியாம்
தெள்ளார் புனற்கன்னி தெற்காகும் – உள்ளார
ஆண்ட கடல்கிழக்கா மைம்பத் தறுகாதம் (56)
பாண்டிநாட் டெல்லை பகர். பெருந்தொகை 2098)



சேரநாடு முதன்மை

1. தொல்காப்பியம்
போந்தை வேம்பே ஆரென வரூஉம்
மாபெருந் தானையர் மலைந்த பூவும்

2. புறநானூற்று தொகுப்பு
மூவேந்தருள் சேரரைப் பற்றிய பாடல்களை முதலிலும், ஏனைய இருவர் பாடல்களைப் பின்னரும் வைத்து முறைப்படுத்தியிருக்கின்றனர்.

3. சிறுபாணாற்றுப்படை
மூவேந்ரை குறிப்பிடும்போது குட்டுவன், செழியன், செம்பியன் எனச் சேரரை முன் நிறுத்தி வரிசைப்படுத்துதல்.






சேரர் பற்றிப் பாடியச் சங்க இலக்கியப் புலவர்கள்
பதிற்றுப்பத்து பாடியோர்
குமட்டூர் கண்ணனார்
பாலைக்கௌதமனார்
காப்பியாற்று காப்பியனார்
பரணர்
காக்கைபாடினியார்
கபிலர்
பெருங்குன்றூர் கிழார்
அரிசில்கிழார்
ஏனையோர்
மோசிகீரனார்
ஓரம்போகியார்
பேய்மகள் இளவெயினி
குறுங்கோழியூர்கிழார்
பொருந்தில் இளங்கீரனார்
கூடலூர்சிழார்
திருத்தாமனார்
ஔவையார்
பொய்கையார்
நக்கீரர்
முரஞ்சியூப் முடிநாகராயர்
மாமூலனார்
இளங்கீரனார்
குண்டுகட்பாவியாதன்
கோனாட்டு எறிச்சிலூர் மாடலன் மதுரைக்குமரன்
நரிவெரூஉத்தலையார்
உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்

சங்க இலக்கியம் பாடிய சேர அரசர்கள்
1. சேரமான் எந்தை
2. நம்பி குட்டுவன்
3. குட்டுவன் கண்ணன்
4. கருவூர்ச் சேரமான் சாத்தன்
5. சேரமான் இடங்குட்டுவன்
6. சேரமான் கணைக்காலிரும்பொறை
7. சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை
8. சேரமான் பாலைபாடிய பெருங்கடுங்கோ



சங்க இலக்கியத்தில் பாடல் பெற்ற சேர வேந்தர்கள்
1. சேரமான் பெருஞ்சோற்றுதியன் சேரலாதன்
2. உதியஞ்சேரல்
3. இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்
4. பல்யானை செல்கெழுகுட்டுவன்
5. களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரல்
6. கடல்பிறத்கோட்டிய செங்குட்டுவன்
7. ஆடுகோட்பாட்டுச் சேரலாதன்
8. சேரமான் கருவூற்றிய ஒள்வாட்
கோப்பெருஞ்சேரலிரும்பொறை
9. சேரமான் அந்துவஞ்சேர லிரும்பொறை
10. மாந்தரம் பொறையன் கடுங்கோ
11. பெருஞ்சேர லிரும்பொறை
12. இளஞ்சேரலிரும்பொறை
13. ஆதன் அவினி
14. சேரமான் பாலைபாடிய பெருங்கடுங்கோ
15. யானைக்கட்சேய் மாந்தரஞ்சேர லிரும்பொறை
16. சேரமான் குட்டுவன் கோதை
17. சேரமான் மாரிவெண்கோ
18. சேரமான் கோக்கோதை மார்பன்







சேர அரசர்கள் பாடிய, சேர அரசர்கள் பற்றிய சங்கப் பாடல்கள்

அகநானூறு – 62
ஐங்குறுனூறு – 10
கலித்தொகை – 38 (பாலைக்கலி)
குறுந்தொகை – 38
நற்றிணை – 22
பதிற்றுப்பத்து – 90
புறநானூறு – 68
சிறுபாணாற்றுப்படை – 1
மதுரைக்காஞ்சி - 1
----------------
330
----------------



சங்க இலக்கியம் – தமிழ் - பொதுமை

• சங்க இலக்கியங்கள் ஒரே பண்பாட்டை இயம்புகிள்றனவா

• நிலவியல் சார்ந்து பிறமொழி( தெலுங்கு, கள்ளடம், மலையாளம்) யாளர்களின் வாழ்வியல் கூறுகளை சங்க இலக்கியத்தில் காணமுடியுமா

என்.வி. கிருஷ்ணவாரியர்
சங்க இலக்கியம் என்ற பொதுப்பெயரில் அறியப்படுகின்ற இந்த நூல்கள் தமிழருடையது மட்டுமல்ல கேரளீயருடையதும் ஆகிய இலக்கியப் பழஞ்செல்வத்தின் மிக முக்கியமான ஒரு பாகம் ஆகும். இந்த நூல்களைப் பற்றி ஓரளவாவது புரிந்து கொள்ளுதலும், அவற்றில் மிக முக்கியமானவைகளை நெருங்கி அறிந்து கொள்ளுதலும் செய்வது கேரளீயருடைய நல்ல இலக்கியப் பயிற்சியின் தள்ளவியலா ஒரு பகுதியாகக் கொள்ளப்பட வேண்டும் (என்.வி. கிருஷ்ணவாரியர், அகம் கவிதைகள், கேரள சாகித்ய அகாதமி, 1981, பக்.7
சுனித்குமார் சாட்டர்சி
பழந்தமிழ்ச் சங்க காலப் படைப்புகள் எனப்பெறும் பத்துப்பாட்டு, எட்டுத்தொகை ஆகியவற்றின் சமூகச் சூழல் நடை,பின்னணி ஆகியன தமிழ்நாட்டிற்கே உரிய தனித்தன்மை வாய்ந்தனவாகும். எனினும், இவை ஏனையவற்றில் இருந்து முற்றும் ஒதுங்கியவை அல்ல. (சாட்டர்சியின் திராவிடர் வரலாற்று மானுட மொழியியல் நோக்கு அனவயலாய்வு, மொ. ஆ: க.ப. அறவாணன்,பாரிநிலையம்,சென்னை, 1990, ப. 90)








மலைநாட்டு வாழ்வியல் கூறுகள் : சங்க இலக்கியம்


• அகப்பாடல்கள்
மலைசார்ந்த பாடல்கள்
கருப்பொருள் வருணனை
• புறப்பாடல்கள்
வெளிப்படையான செய்திகள்
மொழியமைப்பு ரீதியான வேறுபாடு





இவற்றை உள்ளடக்கிய தனியாய்வுகள்












III

மலையாளம் தனிமொழி









தேசிய இன அடையாளம்
• மொழி
• பண்பாடு
• நில்வியல் கூறுகள்

• அரசியல் சூழ்நிலை

• திராவிட மொழிகளில் சமசுகிருதம் கலத்தல்

• சமண, பௌத்த வீழ்ச்சி


• மலையாள மொழியும் தமிழ் மொழியும் இலக்கிய உருவில் செந்தமிழாகவும் பேச்சுருவில் வேறுபட்டவையாகவு முள்ளன. இதிலிருந்து தமிழ் மொழியானது நாளடைவில் மேற்குக் கரையில் மலைநாட்டு மொழியாக மாறுபாடைந்தது என்று அறியலாம். இந்த மாறுபாட்டுக்கு பூகோளம், பண்பாடு, சமயம், இனம், அரசியல் போன்ற பல காரணங்கள் காணப்பெறும். (கலைக்களஞ்சியம், தெகுதி – 1, ப. 189)


• நம்பூதிரிகளின் செல்வாக்கும் ஆரிய திராவிடக் கலப்பும் கிறித்து ஆண்டுத் தொடக்கத்தின் முன்னரே, பிராமணர், பௌத்தர், சமணர் ஆகிய ஆரியர்கள் தென்னாட்டில் புகுந்துவிட்டனர். ஆனால் அவர்கள் தனித்தகி குடும்பங்களாக வந்தனரேயன்றிப் பெரிய குழுவாக வந்த்தில்லை. ஆரியப் பிராமணர் கிராமங்களாகக் கேரளத்தில் குடியேறி வாழத் தொடங்கியதும் கி. பி. 6-ம் நூற்றாண்டிலாகும் (ராஜராஜ வர்மா,கேரள பாணினீயம், முகவுரை, ப. 19)

• மலயாள மொழி செவ்வியல் தகைமை சமசுகிருத கட்டமைப்பு





IV
மலையாளம் – சங்க இலக்கியம் வாசிப்புகள்









ஐயப்பப் பணிக்கர்

All the four Dravildian Literatures, it is believed can claim to have descended from the common proto-Dravidian ancestor represented by the Sangam anthologies and their basic grammatic text Tolkappiyam. In spete of innumerable echoes from other cultuers accumulated through the centureies. One might see the unique features commou to the Southern area in their rudimentary form in these works. A detailed comparative study of the Sangam classics in relation the subequent literaty developments in Tamil, Malayalam, Kannada and Telugu is bound to be a of immense interest to the comparativst. Thi interpenetration of the North and the South can also be studied along side. (“The Nature and Scope of Comparative Study in South Indian Literture.” Research Papers. Vol XIV (1984 - 85) pp. 45 – 47, Dept.of Tamil, University of Kerala.)
வாசிப்பு வகைமைகள்

• சங்க இலக்கியங்களைப் பாண்டியர், சோழர் (தமிழ்) இலக்கியங்களாகப் பார்த்தல்

• மலையாளத்தின் ஆதி இலக்கியங்கள் தமிழாவே இருந்தது (சங்க இலக்கியங்கள், இராம சரிதம்)

• சங்க இலக்கியத்தின் ஒரு பகுதி மலையாள நாட்டில் தோன்றியவை

• சங்க இலக்கியங்களில் காணப்படும் பண்பாட்டுக் கூறுகள் / கலாச்சார விழுமியங்கள் மலையாள இலக்கியங்களில் / வாழ்க்கையில் காணப்படுதல்

• சங்க இலக்கியச் சொற்குழுமங்கள் இன்றும் மலையாளத்தில் காணப்படுதல்

o இலக்கண ரீதியான உறவுமுறை

தமிழில் தொல்காப்பிய விதிகள் சங்க இலக்கியத்தில் காணப்பட பின் வழக்கற்றுப்போதல். மலையாளத்தில் இன்றும் காணப்படுதல் அத்துச் சாரியை : வெயிலத்துப் போனான்

• சங்க இலக்கிய நாடு, ஊர்ப்பெயர்கள் மலையாளத்தில் வழங்குதல்

• சங்க இலக்கிய திணைக்கோட்டை தற்கால மலையாள இலக்கியங்களுடன் ஒப்பிடுதல்


சங்க இலக்கியம் : பாண்டியர், சோழர் இலக்கியங்கள்

லீலாதிலக ஆசிரியர்
“கூந்தல் முதலிய சொற்கள் சோழ மக்களின் பொதுவழக்கில் காணப்படுவதால் அவை சோழமோழிச் சொற்கள் என்ற முடிவுக்கு வருவ”தெனின் அவை கேரளரது சிறப்பு வழக்கிலும் காணப்படுகின்றனவல்லவா. பின் அவை சோழமொழிச் சொற்களே என்று எவ்வாறு அறுதியிட்டுக் கூறமுடியும். கேரளரது சிறப்புவழக்கில் காணப்படுவதற்கு அவ்வளவு முதன்மை அளிக்க வேண்டாம் என்று கூறின் ஆடூ(உ) , மகடூ(உ), நாடுரி முதலிய சோழமொழிச் சொற்கள் அல்ல என்றெய்தும், கேரளமொழி முதலியவற்றின் சொற்களுமாகா. அவை சோழ பாண்டியர்களின் சிறப்பு வழக்கு நூற்களாகிய பத்துப்பாட்டு, எட்டுத்தொகை முதலிய சங்க இலக்கியங்களில் அன்றி பொதுவழக்கில் பயன்படுவதில்லையன்றோ (லீலாதிலகம் நூற்பா 1இன் உரை, மொ.பெ.ஆ- மா. இளையபெருமாள்,தமிழ்ப் புத்தகாலயம்,1971. பக். 14 - 15)





மலையாளத்தின் ஆதி இலக்கியங்கள் : சங்க இலக்கியங்கள்

தகழி சிவசங்கரன் பின்ளை (வ.அய். சுப்பிரமணியம்)
பெயர்பெற்ற நாவலாசிரியர் தகழி சிவசங்கரப்பிள்ளை இரஷ்யாவிற்குத் தாம் சென்றபோது இரஷ்ய இலக்கிய ஆசிரியர்கள் கேட்ட கேள்வியொன்றைஇ திருவனந்தபுரத்தில் ஒரு மூன்று அல்லது நான்கு ஆண்டுகளுக்குமுன் நடந்த முதல் உலக மலையாள மாநாட்டில் உருக்கமாக வெளியிட்டார். இதை நாமும் ஏனைய திராவிட மொழிபேசுவோரும் அறிந்திருப்பது நல்லது. மலையாள இலக்கியமனைத்தும் சமஸ்கிருதச் சார்பாக இருக்கின்றனவே; உங்களுக்கெனத் தனி இலக்கியம் என்று கூற ஒன்றுமில்லையே? என்பது இரஷ்யரின் கேள்வி. தகழி சிவசங்சரப்பிள்ளை அதற்கு, ஏன் இல்லை எங்கள் பழைய இலக்கியமாகிய சங்க இலக்கியமும், நாட்டுப் பாடல்களும் தென்னகத்தின் தனித்துவத்தைக் காப்பது – மானங்காப்பது சங்க இலக்கியமும் நாட்டுப் பாடல்களும் தாம். எனவே இவற்றைப் பயன்படுத்தி நாம் நமது இலக்கியக் கொள்கையை வரையறை செய்துகொள்வது மிகவும் தேவை. (வ.அய். சுப்பிரமணியம், நவீன கவிதை – தலைமை உரை, ப.8)


சங்க இலக்கிய திணைக்கோட்பாடு
மலையாள இலக்கியங்களுடன் ஒப்பிடுதல்
ஐயப்பப் பணிக்கர்
தமிழிலும் ஏனைய இந்திய மொழிகள் மற்றும் ஆங்கிலம் மடஉட்பட்ட திராவிடமல்லாத பிற உலக மொழிகளிலும் வெளிவந்துள்ள படைப்புகளில் புதிய திணைகளைக் கண்டுபிடிக்கலாம். இதைத் திணைப் பெருக்கம் என்று அழைப்போம் . மலையாளத்தில் மகோவிலனின் ஹிமாலயம், முகுந்தனின் டெல்ஹி வங்கமொழியில் விபூஷணின் ஆரண்யக், தமிழில் ஜோ டி குரூஸின் ஆழிசூழ் உலகு, நீல. பத்மநாபனின் பள்ளிகொண்டபுரம் போன்ற நாவல்கள் – எடுத்துக்காட்டாக இந்தப் படைப்புகள் ஒவ்வொன்றையும் தனித்தனியாக எடுத்துக்கொண்டு, மேலே தொல்காப்பியம் விதித்திருக்கும்திணைகளிலிருந்து இவை பிறண்டிருக்கின்றனவா (விலகியிருக்கின்றனவா), எங்கே ஒன்றுபடுகின்றன, பிறண்டிருக்கிறதெள்றால் மதினைப் பெருக்கத்திற்கு வழிவகுக்குமா என்றெல்லாம் விரிவாக ஆய்வு செய்வது, திணைப் படிப்பைச் சமகால இலக்கியத்தின் நவீனப் பார்வைகளுக்குச் சாதகமாக்க வெகுவாகத் துணைபுரியும்.(ஐயப்ப்ப் பணிக்கரின் ஆளுமையும் சில படைப்பு மாதிரிகளும், நீல பத்மநாபன், விருட்சம், சென்னை, 2006, பக்.76 – 77)

ஷேக்ஸ்பியரின் மாக்பெத்






P.M. Sreedharan
The concepct of Tinai in Tamil Poetics its Application in the malayalam Novels of Uroob and T. Vasudevan Naiar,
Ph. D Thesis,
Calicut Universsity,
2006.
(srpervisor : Dr. A. Achuythan Unni
ஐயப்பப் பணிக்கர்
தகழி சிவசங்கரபிள்ளை கயிறு நாவல் – பூ பிரக்ருதிருயும் தகழியுடெ கயிறில், 1985







சங்க இலக்கியங்களில் காணப்படும் பண்பாட்டுக் கூறுகள் / கலாச்சார விழுமியங்கள் மலையாள இலக்கியங்களில் / வாழ்க்கையில் காணப்படுதல்


கா. சுப்பிரமணியன்
சங்க மஇலக்கியங்களுள் பயிலப்படும் பல வழக்காறுகள் இன்றளவும் கேரளப் பகுதிகளில் காணப்படுவதனையும் மு. ரா. முதலானோர் திரட்டித்தருவதில் ஆர்வம் காட்டினர். ஆர்ப்பு, கடுஞ்சூல், வாலாமை தற்று(துணிகளை இறுகக் கட்டுதல்) கயந்தலை(இளமைப் பெயர்) விளி, புமுக்கு முதலானவை சில சான்றுகள் (கடுஞ்சூல் சிறுவன் அகம் 304) குடிசெய்வல் என்றும் ஒருவர்க்குத் தெய்வம் மடிதற்றுதான் முந்தும் கயந்தலை மடப்பிற (பத்துப்பாட்டு, மலைபடுகடாம்) கட்டிப்புமுக்கிற் கொங்கர் கோவே (பதிற்றுப்பத்து 9-1). விழாக்கள், மக்கள் வாழ்க்கைக்கூறுகள் முதலாயவும் தொகை நூற்களில், பிந்திய இலக்கியங்களில் காணப்படுவனவற்றைத் தற்கால ஒழுகலாறுகளோடு இயைத்துக் காட்டும் வகையிலும் குறிப்புக்கள் வலவற்றை எழுதியுள்ளனர்.
சேரநாடு செந்தமிழ் இலத்தியங்களில் மிகுதியாகப் பரவப்பட்டது . இன்றளவும் பல பழமைகளை மறையாமல் காத்துவருகின்றது. ஆய்வுலகம் அவற்றைக் தொகுத்துத் தருவதில் ஆர்வமும் காட்டிவருகிறது.(சேரநாடு பற்றிய தமிழாய்வுகள், ப.11)

மருமக்கள் தாயம், முன்குடுமி, முண்டு உடுத்தல் முதலியவைகளெல்லாம் மாறுபட்ட ஆசாரங்களாகும். இவைகளில் ஒன்றும் இந்நாட்டில் புதியதாகத் தோன்றியதல்ல. பதிற்றுப்பத்தில் புகழப்படும் வள்ளல்களும், அரசர்களும் மருமக்கள் தாயம் அனுசரித்ததாக அந்நூலிலேயே கூறப்பட்டுள்ளது. (ஏ.ஆர். ராஜராஜவர்மா, கேரள பாணினீயம், தமிழ்த்துறை, கேரளப் பல்கலைக்கழகம், திருவனந்தபுரம்,1977, பக். 16,17.)

சங்க காலச் செய்திகள் வட மலையாள நாட்டில் இன்றும் சில மாறுபாடுகளோடு கர்ணபரம்பரைச் செய்திகளாகவும், கதைகளாகவும் நிலவுகின்றன. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்திய சில செய்திகள் இன்னும் நாட்டார் மரபில் நிலைத்து நிற்கிறது. (நா.வானமாமலை, ஆராய்ச்சி காலாண்டிதழ், மலர்-5,1975.)

தற்காலம் மலையாள நாட்டில் வேலன்மார் என்ற இனத்தினர் செய்யும் தெய்வ ஆட்டங்களிலும் தெய்வத்தைச் சாந்தி செய்யும் சடங்குகளிலும் சங்ககாலத் தமிழகத்தில் நடந்த வெலன் வெறியாட்டத்தின் வழிபாட்டு முறைகள், மரபுகள் காணப்படுகின்றன. வேலன் வெறயாட்டம் தமிழத்தில் மறைந்து போத மலையாள நாட்டில் எஞ்சியிருப்பது மிகவும் வியப்புக்குரிய தாகும். (பி.எல். சாமி, மலையாள நாட்டில் வேலம் ஆட்டம், வ. சுப்பையா பிள்ளை பவளவிழா மலர், 1973.)





















சங்க இலக்கியச் சொற்குழுமங்கள் : மலையாளத்தில்

கே. பரமேச்வரன் நாயர்

கேரள நாட்டுடன் நெருங்கிய தொடர்புடைய சிலப்பதிகாரம், பதிற்றுபத்து முதலிய பழந்தமிழ் நூல்களில் பயின்று வருவனபும், மூலத்திராவிட மொழிகளின்றும் வழிவழி வந்தனவும் ஒரு காலத்தில் வழக்கிலிருந்தனவுமான எண்ணிறந்த திராவிடச் சொற்கள் (எ. டு. நுன்னல்க்காரன், பீடிக அங்காடி, அளியன் பாத்தாயம், ஈடு, தோனி, பாணி, பாவ, புலரி, இன்ன பிற) இன்றையத் தமிழர்களால் நிகண்டின் உதவி கொண்டு புரிந்துகொள்ள வேண்டிய அருஞ்சொற்களாயிருக்க, மலையாளிகளைப் பொறுத்த வரையில் அவை இன்னமும் வழக்கிலுள்ள சொற்களாகவே நிலவி வருகின்றன.(பி. கே. பரமேச்வரன் நாயர்,மலையாள இலக்கிய வரலாறு, ப.350)











சங்க இலக்கிய நாடு, ஊர்ப்பெயர்கள் : மலையாளத்தில்


அகம், புறம், நற்றிணை, குறுந்தொகை,பதிற்றுப்பத்து,மலைபடுகடாஅம் – நன்னன் ஆண்ட நாடு ஏழில் மலை. தற்போது வட மலையாள பாமர மக்களிடையே ஏழுமலை, ஏழி மலா என்று வழங்கப்படுகிறது.

ராகவையங்கார்





மலையாள நவீன மொழி - சங்க இலக்கிய மொழி ஒப்பீடு


ஜார்ஜ் எல். ஹார்ட்
கேள்வி : சங்க இலக்கியத்தில் பொருளும் அடர்த்தியும் முக்கியம் கம்பர் காலத்தில் ஒலிநயம் முக்கிய இடம் பிடித்தது. இப்பொழுது நவீன கவிதையில் மறுபடியும் பொருளுக்கும் வார்த்தை செறிவுக்கும் முக்கிய இடம். ஒரு வட்டம் சுற்றி வந்ததுபோல இருக்கிறதே
பதில் : கொஞ்சம் மிகையாகச் சொல்வதுபோல் தெரிகிறது. பல இடங்களில் கம்பன் சங்கப் புலவர்களைப் போலவே பாடியிருக்கிறான். நான் தமிழ் மொழிபொயர்ப்பைப் பக்கத்தில் வைத்துக்கொண்டு செம்மீன் படித்தது ஞாகத்துக்கு வருகிறது. மலையாள மூலத்தில் வசனங்கள் நீளமில்லாமலும் பொருளைப் பட்டென்று சொல்பவையாகவும் இருந்தது ஆனால் தமிழ் மொழிபெயர்ப்ப்பாளர் தன் சொந்த வார்த்தைகளைக் கூட்டி அனாவசியத்துக்கு இழுத்துவிட்டார். இந்த விஷயத்தில் மலையாளம் நவீனத் தமிழைப் போல இல்லாமல் பழம் தமிழைப் போலவே (சங்க காலத் தமிழ் அல்லது கம்பன் தமிழ்) இருக்கிறது.
ஜார்ஜ் எல். ஹார்ட், பழந்தமிழ் என்பது பெரும் சொத்து, காலச்சுவடு, 2005, ப.51(சந்திப்பு – அ. முத்துலிங்கம்)


பிற
சுனித்குமார் சாட்டர்சி
மொழியியல் கண்ணோட்டத்தில் மலையாளமும்,தமிழும் ஒரே வட்டத்தைச் சேர்ந்தவை. மலையாள மொழி, மலையாள மொழியின் மூல வடிவம் பழம் சங்கத் தமிழில் உள்ளது. தமிழ் இலக்கியம் மாறுதல் விரும்பாத போக்கினது ஆகும். சொற்களஞ்சியத்தைப் பொறுத்த அளவிலும் தமிழ் மொழி மாறுதல் விரும்பாத ஒன்றாகும். சங்ககாலத் தமிழ் இலக்கியம் பழங்காலப் போக்கினதாகவும், தூய அயல் மொழிக்கலப்பற்ற தமிழ்ச் சொல்லினதாகவும் அமைந்து உள்ளது. மலையாள இலக்கியம் அது போன்ற அமைப்பினது அன்று. மலையாள மொழியே சமஸ்கிருதக் கலப்பால் ஏற்பட்ட மாறிய வடிவம் ஆகும். (சாட்டர்சியின் திராவிடர் வரலாற்று மானுட மொழியியல் நோக்கு அனவயலாய்வு, மொ. ஆ: க.ப. அறவாணன்,பாரிநிலையம்,சென்னை, 1990, ப. 90)

ஜான் சாமுவேல்
பழைய மலையாள இலக்கியங்களில் தமிழ் ஒலியன்களாக 12 உயிரும், 18 மெய்யுமே மிகுதியாக உள்ளன. கிரந்த எழுத்தையொட்டி மலையாளத்திற்கு எழுத்துக்கள் அமையவே பிற்காலத்தில் மற்ற வடமொழி ஒலிகளும் மலையாளத்தில் மிகப்பயின்று கலப்புற்றன. பண்டைய மலையாள மொழியின் இலக்கியங்கள் வடமொழியை விட தமிழையே பின்பற்றி அமைந்திருக்கின்ற இயல்பினை டா. குண்டர்ட் அவர்களும் டா. கே. எம். ஜார்ஜ் – 1ம் ஒத்துக் கொள்கின்றனர். எனவே டா. கால்டுவெல் கூறுவதைப் போன்று தமிழின் மிகத் திரிந்த கிளைமொழி மலையாளம் என்று கொள்வதே பொருந்தும். இலக்கிய லயத்திலும் படைப்பாற்றலிலும் இன்றைய நிலையில் திராவிட மொழிக்குடும்பத்தில் மிக உயர்ந்த இடத்தை மலையாளமே பெறுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.(திராவிட மொழிகளின் ஒப்பாய்வு ஓர் அறிமுகம்)






V
சங்க இலக்கியம் படைப்பாளி பார்வை











ஆதிகவிகள்

கபிலர் பரணர்
பெருங்கடுங்கோ இடைக்காடனார் அம்மூவனார் இளங்கோ
கழாத்தலையார் ஔவையார்
கௌதமனார் சாதேவனார்
கயமனார் கள்ளம்பாளனார்
காப்பியாற்று காப்பியனார் இளங்கண்ணனார்
குமட்டூர் கண்ணனார்




ஸஹ்யசிரஸ்ஸார்ந்ந
என்டெ த்ராவிடகோத்ரத்தின்டெ ஆதிகவிகளே,
ஆராயிருந்நு நிங்ஙள்
ஏது மலயுடெ புலரியானு
நிங்ஙளுடெ வரிகளில் இத்ரயேறே ஸ்வர்ண்ணம்,
இத்ரயேறே பூக்களுடே ஸுகந்தம் நிறச்சது
ஏது புழயுடெ ஜலமாணு
நிங்ஙளுடெ ரக்தத்தில்
திளங்நுந்ந பதங்ஙளுடெ பரல்மீனுகளுமாயி
துள்ளிச்சாடியது
ஏது வயலின்டெ தினயாணு
நிங்ஙளுடெ ஞரம்புகளிலெ
மைனகள்க்கு தீற்றியாயது
ஏது தாழ்வரயுடெ பச்சயாணு
நிங்களுடெ நித்ரகளில் இத்ரயேறெ ஸ்வப்னங்ஙளுடெ
பவிழம் நிறச்சது
ஒரு மஹாசக்தி மந்த்ரம் போலே வீண்டும் விண்டும்
ஞான் நிங்ஙளுடெ ஐந்த்ர ஜாலிகனாபங்ஙளுருக்கழிக்குந்நு



கபிலர்,
தன்டெ குறிஞ்ஞிப்பாட்டுகளில் வாகயும் இலஞ்ஞியும்
ப்லாசும் பிச்சகவும் விடுத்தியன்,
வத்ஸலஜாக்ரதயுடெ தழலும் தட்டயும் குளிரும் யாழும் முழக்கி,
கவிதகள் பழத்து சாஞ்ஞ வயலுகள்க்கு காவல் நின்னவன்,
இடயன்டெ புல்லாங்குழலில்நிந்நு நாட்டக் குறிஞ்ஞி யொழுக்கி
விரஹிணியுடெ மிழிமயிலுகளெ ந்ருத்தம் செய்யிச்சவன்,
பரணர்,
தன்டெ த்ராவிடபாஷயுடெ ம்ருதுஸ்வரங்ஙளில்
மிழாவும் முரசும் கிணைப்பறயும் முழக்கியவன்,
போர்னிணமணிஞ்ஞ பொந்தப்படர்ப்புகளில்
கடுந்துடியிமாயலஞ்ஞு தீப்படர்த்தியவன்,
ப்ரகாசம் பரத்துந்ந வேங்ஙமரங்ஙள்க்கிடயிலூடெ
விரிஞ்ஞ மாறுமாயி இடிமுழக்கங்ஙளிலேக்கு ஸவாரி செய்தவன்.
பெருங்கடுங்கோ,
கணிக்கொந்நகளில் கார்த்திக நக்ஷத்ரங்ஙள் கொளுத்தி வச்ச
காடுகளுடெ காமுகன்,
காட்டு மல்லிகயும் செங்கரிங்காலியும் தலயில் சூடி
இணயானகள்க்கு மதம் பகர்ந்நவன்,
காட்டாறின்டெ ஸிம்ஹானங்ஙள்க்கு தன்டெ கொங்கணதேசத்தெ
பெண்ணரிப் பிறாவுகளுடெ சிறகு நல்கியவன்.
இடைக்காடனார்,
குடகப்பால பூக்குந்ந மழக்காலத்தின்டெ தேவன்,
காயாம்பூக்களில் பற்றிச்சேர்ந்ந ஈயாம் பாட்ட(ற்ற) களிலிநிந்நு
தெளிவானிலேக்குள்ள தூரம் ஸ்நேஹம் கொண்டளந்நவன்,
மழயில் தணுத்து விறய்க்குந்ந இடயத்திக்கு தீக்காயான்
சப்தங்ஙடெ அரணி கடஞ்ஞு அக்னி நிர்ம்மிச்சவன்.
அம்மூவனார்,
கடல்த்தீரச் சேரிகளுடெ மதுரகாயகன்,
அண்ணான் பல்லுகள் நிறஞ்ஞ முல்ச்செடிகள்கிடயில் முறிஞ்ஞ
புன்னமரப் பூக்கள்க்கு முக்குவத்தியுடெ சிரிகள் தளர்ந்ந கைகள்க்கு
உப்பளங்ஙளில்நிந்நு உப்புவண்டி வலிச்சு தளர்ந்ந கைகள்க்கு
வேளூரிபோலெ மின்னுந்ந வெள்ளிவளகள் ஸ்வப்னம் கண்டவன்

வீண்டுமத்ர பேருகள்
கண்ணகியுடெ சிலம்பொலிகொண்டு ஹ்ருதயத்தின்டெ
வேப்புமரத்தில் மதுரம் நிறச்ச இளங்கோ,
யுத்த பூமிகளுடெ க்ரௌர்யத்தில்நிந்நு கண்ணிரின்டெ
தடாரிப்பறகள் முழக்கிய கழாத்தலையார்,
பதியெத்தேடி யாத்ரதிரிச்ச வயாகுலதய்கொப்பம்
புலிமடகள் கயறியிறங்ஙிய ஔவையார்,
அடருகள் தரிசாக்கிய நகரங்ஙளிலுருந்ந
அலிவிந்நாயி ப்ரார்த்திச்ச கௌதமனார்………

ஆராயிருந்நு நிங்ஙள்
படிஞ்ஞாறன் காற்றி(ட்டி)ல் ஞங்ஙள் மறந்நுபோய
நிங்களுடெ ஸங்கீதாத்மகமாய நாமதேயங்ஙள்க்கு
பிறகிலொளிச்சிருந்ந ரக்தமாம்ஸங்ஙளுடெ
ருசியும் ரூபவுமெந்தாயிருந்நு
ஆராயிருந்நு சாதேவனார்
ஆராயிருந்நு கயமனார், கள்ளம்பாளனார்
ஏதுஊரிலாயிருந்நு காப்பியாற்று காப்பியனார்
இளங்கண்ணனார், எத்ர திவஸம் பணியெடுத்து
எத்ர திவஸம் பட்டினிகிடந்நு குமட்டூர் கண்ணனார்
க்ருஷியிடங்ஙளிலும் முக்குவச் சேரிகளிலும்
இடயக்குடிகளிலும் படத்தாவளங்ஙளிலும் நிந்நு
நிங்ஙள் வியர்ப்பும் மிழிநீருமொழுக்கி முளப்பிச்சு வலுதாக்கிய
ஆ பாலமரத்தில்நிந்நு ஏற்றவுமிளய ஒரு பூவு
இதா ஸ்வந்தம் வ்ருக்ஷத்தெ நோக்கிக்காணுந்நு.








ஆதிகவிகளே,
என்டெ வாக்குகள்க்கு நிங்ஙளுடெ பழமொழிகளுடெ
வீர்யவும் கருணயும் பகர்ந்நுதரூ
ஞானென்டெ கடினயாத்ர துடங்ஙட்டெ
என்டெ தேசத்தின்டெ குருதிகளிலேக்கும் கருத்து
களிலேக்கும்
ஒரு புதிய உணர்வ்வின்டெ தளிரு தேடி
ஒரு புதிய காதலின்டெ உறப்பு தேடி















VI
மொழிபெயர்ப்புகள்












மொழிபெயர்ப்புகள்
1. பதிற்றுப்பத்து, முத்தொள்ளாயிரம்,புறநானூறு ஆர்.நாராயணப் பணிக்கர், எஸ்.டி. ரெட்டியார் பிறஸ் கொல்லம், முதற்பதிப்பு. 1958
2. பதிற்றுப்பத்து ஜி. வைத்திய நாத அய்யர், கேரள சாகித்ய அக்காதமி, திருச்சூர், முதற்பதிப்பு. 1961
3. புறநானூறு வீ. ஆர். பரமேஸ்வரன் பிள்ளை, கேரள சாகித்ய அக்காதமி, திருச்சூர், முதற்பதிப்பு. 1969
4. செந்தமிழ் முத்துகள் எம். நாராயணகுட்டி, நேஷனல் புக்ஸ்டால், கோட்டயம், முதற்பதிப்பு. 1974. (35 சங்கம் கவிதைகள்)
5. அகம் கவிதைகள் என்.வி. கிருஷ்ணவாரியர், கேரள சாகித்ய அக்காதமி, திருச்சூர், முதற்பதிப்பு. 1981(100 கவிதைகள்)
6. அகநானூறு மூலமும் உரையும் தொகுதி ஒன்று நென்மாற பி. விசுவநாதன் நாயர், கேரள சாகித்ய அக்காதமி, திருச்சூர், முதற்பதிப்பு. 1981
7. அகநானூறு மூலமும் உரையும் தொகுதி இரண்டு நென்மாற பி. விசுவநாதன் நாயர், கேரள சாகித்ய அக்காதமி, திருச்சூர், முதற்பதிப்பு. 1983
8. அகநானூறு மூலமும் உரையும் தொகுதி மூன்று நென்மாற பி. விசுவநாதன் நாயர், கேரள சாகித்ய அக்காதமி, திருச்சூர், முதற்பதிப்பு. 1984
9. நற்றிணை



அகம் கவிதைகள் என்.வி. கிருஷ்ணவாரியர்
(100 தலைப்பு 66 புலவர்கள் பாடியவை)

தமிழ்
குடிபுறங்காத தோம்புஞ் செங்கோலான் வியன்தானை
விடுவழி விடுவழிச் சென்றாங்கவர்
தொடுவழித் தொடுவழி நீங்கிற்றால் பசப்பே

மலையாளம்
செங்கோல் பிடிச்சு குடிகளெக் காக்குந்ந
தம்புரான் பாண்டியன்றெ வீர ஸைண்யம்
செந்நேடம் செந்நேடம் சத்ருக்கள் பேடிச்சு
முன்னில் நிந்நோடி யொளிக்கும் பேலே
தொட்டேடம் தொட்டேடம் வைவர்ன்யம் போம்மட்டி
லெத்திப் புணர்ந்நான் உற்ருதயநாதன்.


















VII
முன் ஆய்வுகள்






முன் ஆய்வுகள்
1. பண்டைக் கேரளத்தில் கூத்தும் இசையும், எஸ். வையாபுரிபிள்ளை, செந்தமிழ், தொகுதி – 49, பகுதி – 11, மதுரை, 1953
2. திணைக்கோட்பாட்டு வளர்ச்சியில் சேர, சோழ, பாண்டிநாடுகளிம் பங்கு, Journal of Tamil Studies – 35, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சூன்.1989, பக்.72 – 80
3. சேரநாட்டு முத்து, மயிலை சீனி. வேங்டசாமி, சமயங்கள் வளர்த்த தமிழ், பக். 152-158, மணிவாசகர் நூலகம், சென்னை, 1960.
4. மலையாள அக இலக்கியத்தில் உள்ளுரை உத்தி, ஹரி. விசயலெட்சுமி, இந்தியப் பல்கலைக்கழக தமிழாசிரியர் மன்றம் 20வது ஆய்வுக்கோவை, தொகுதி – 4, பக். 194-199, அண்ணாமலைநகர், 1988.
5. நற்றிணை மலையாள மொழிபெயர்ப்பில் சொல்தேர்ச்சி, க. லதா, ஐந்தாம் ஆய்வாளர் மன்றம்,(மூன்றாம் கருத்தரங்கம் ), ஆய்வுச்சிந்தனைகள் (பகுதி 2, பக். 36 – 42), மதுரை, 1997.
6. கேரளத்தில் பாணர்மரபு, பா. ஆனந்தகுமார், இந்தியப் பல்கலைக்கழக தமிழாசிரியர் மன்றம் 20வது ஆய்வுக்கோவை, தொகுதி – 3, பக். 73 – 78, அண்ணாமலைநகர், 1988.
7. நன்னனது மலைநாடு, ம. இராசமாணிக்கனார், பேராசிரியர் டாக்டர் ரா.பி. சேதுபிள்ளை வெள்ளிவிழா மலர், பக். 243 – 253, சென்னை, 1961
8. சங்ககாலக் கேரளம், நீ.சொ. இராசலெட்சுமி, இந்தியப் பல்கலைக்கழக தமிழாசிரியர் மன்றம் 21வது ஆய்வுக்கோவை, தொகுதி – 3, பக். 105 – 110, அண்ணாமலைநகர், 1989.
9. மலையாளத்தில் சங்கத் தமிழ் அகப்பாடல், கி. நாச்சிமுத்து, செந்தமிழ், தொகுதி – 78, பகுதி – 2, பக். 64 – 72, ஜுன் 1984.
10. வட மலையாள நாட்டில் நன்னன் நினைவுகள், பி. எல். சாமி, ஆராய்ச்சி காலாண்டு ஆய்வு இதழ், மலர் – 5, இதழ் -1, 1975
11. மலையாள நாட்டில் வேலன் ஆட்டம், பி.எல். சாமி, கழக ஆட்சியாளர் தாமரைச்செல்வர் வ. சுப்பையா பிள்ளை பவளவிழா மலர், தமிழ்ச்சங்க வெளீயீடு, 1973,பக். 153 – 164
12. சேரநாடு பற்றிய தமிழாய்வுகள், க. சுப்பிரமணியன்,
13. மலையாள மொழித்தமிழின் கிலைமொழியே, அ.கி. பரந்தாமனார், செந்தமிழ், தொகதி-54,பழுதி-9,10, மார்கழி 1958, ப்க். 275 – 280, மதுரை.
14. மலையாள மொழி, மயிலை சீனி. வேங்களசாமி, மயிலைசீனி வேங்கடசாமி ஆய்வுக்கட்டுரைகள், தொகுதி – 4, மக்கள் வெளியீடு, சென்னை,2001, 1937.
15. லீலாதிலக ஆசிரியரது தமிழ் நூற்பயிற்சி, வ. வினாயகப் பெருமாள், இந்தியப் பல்கலைக்கழக தமிழாசிரியர் மன்றம் ஆறாவது கருத்தரங்கு ஆய்வுக்கோவை, பாண்டிச்சேரி தாகூர் அரசினர் கலைக் கல்லூரித் தமிழ்த்துறை வெளியீடு, 1974, பக். 722 - 727
16. தமிழும் மலையாளமும், க.த. திருநாவுக்கரசு, செந்தமிழ்ச் செல்வி, சிலம்பு – 28, பரல் – 8, 1974
17. தொல்காப்பிமும் மலையாளமும், மா. இளையபெருமாள், இந்தியப் பல்கலைக்கழக தமிழாசிரியர் மன்றம் மூன்றாவது கருத்தரங்கு ஆய்வுக்கோவை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம், 1974, பக். 196 – 202
18. மலையாளவியல் ஆய்வு ஒரு கண்ணோட்டம், ப. பத்மனாபன் தம்பி, புலமை, பகைலைக்காலாண்டிதழ்,தொகுதி – 3, பகுதி – 3, சூலை – செப்டம்பர் 1977.
19. மலையாள மொழியின் உருப்பேறும் வளர்ச்சியும், செ.வை. சண்முகம், புலமை, தொகுதி – 4, 1975,பக்.19 – 25.
20. லீலாதிலகத்தின் கோட்பாடு, செ.வை. சண்முகம், தமிழ்க்கலை, தொகுதி – 3, 1984.
21. ராஜராஜவர்மாவின் மொழி உணர்வு, செ.வை. சண்முகம், தமிழியல் தொகுதி – 46, 1994.
22. லீலாதிலகம் கூறும் இலக்கியக் கொள்கைகள், கி. நாச்சிமுத்து, தமிழ் இலக்கிய கொள்கைகள், பாரதியார் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர், 2004, பக். 1 – 25.
23. சிலப்பதிகாரத்தில் மலைநாட்டு வழக்குகள், கி. நாச்சிமுத்து, இளங்கோவடிகள் இலக்கிள மன்றம், கோவை,2005, பக்.26 – 42
24. தமிழ் நவீன பயன்பாட்டுக்கு உதவுகிறதா, ஜெயமோகன்,தொனி, 2002, பக்.13–17.
25. தமிழ் மலையாள இலக்கிய வரலாறு பொதுக்களங்கள், கி. நாச்சிமுத்து, 34ஆம் ஆய்வுக்கோவை, சென்னை,2004.
26. மலையாள முதல் இலக்கணநூல் லீலாதிலகம் போற்றும் பாண்டிய மன்னர்கள், கி. நாச்சிமுத்து, 35ஆம் ஆய்வுக்கோவை, சென்னை,2005.
27. பாடல்பெற்ற கேரளத்துக் கோவில்களில் தலவிருட்சங்கள், கே.கே. சுந்தசோபிதராஜ், இந்தியப் பல்கலைக்கழக தமிழாசிரியர் மன்றம் பதினோறாவது கருத்தரங்கு ஆய்வுக்கோவை, தொகுதி – 3, உஸ்மானியப் பல்கலைக்கழகம், 1979.
28. தமிழும் மலையாளமும், ச. வையாபுரிப்பிள்ளை, தமிழின் மறுமலர்ச்சி,(வையாபுரிப்பிள்ளை நூற்களஞ்சியம் இரண்டாம் தொகுதி) வையாபுரிப் பிள்ளை நினைவு மன்றம், 1989
29. சங்க்கால மக்களது வாழ்க்கையும் நாகரீகமும் பண்பாடும், செல்லன் கோவிந்தன், பண்டைய மலபார் சரித்திரம் (கி. பி. 100 – 700), செல்வம், சித்தூர், கேரளம்,2003





















என்.வி. கிருஷ்ணவாரியர்
சங்க இலக்கியம் என்ற பொதுப்பெயரில் அறியப்படுகின்ற இந்த நூல்கள் தமிழருடையது மட்டுமல்ல கேரளீயருடையதும் ஆகிய இலக்கியப் பழஞ்செல்வத்தின் மிக முக்கியமான ஒரு பாகம் ஆகும். இந்த நூல்களைப் பற்றி ஓரளவாவது புரிந்து கொள்ளுதலும், அவற்றில் மிக முக்கியமானவைகளை நெருங்கி அறிந்து கொள்ளுதலும் செய்வது கேரளீயருடைய நல்ல இலக்கியப் பயிற்சியின் தள்ளவியலா ஒரு பகுதியாகக் கொள்ளப்பட வேண்டும் (என்.வி. கிருஷ்ணவாரியர், அகம் கவிதைகள், கேரள சாகித்ய அகாதமி, 1981, பக்.7
இவற்றில் வடமொழி இலக்கியத்தின் பாதிப்பை விரிவாகவே காணலாம் என்றாலும், வடமொழி இலக்கியத்தினுடையதிலிருந்து வேறான ஒரு இலக்கிய மரபு இவற்றில் நிறைந்து நிற்கிறது, வடமொழி இலக்கியம் போலவோ ஒருவேளை அதை விடவோ குறிப்பு நுட்பம் அமைந்தது இந்த மரபு. அத்தோடு கூடவே ஒளிமையின் இயற்கை நலத்தையும் அதில் காணலாம். இம்மரபை அறியவும் பின்பற்றவும் இயலாது போவது என்பது கேரளீயரைப் பொறுத்த அளவில் வருந்தத் தக்க ஒரு இழப்பாக இருக்கும். இன்று கேரளம் என்று அழைக்கப்படுகிற நிலப்பகுதியில் தான் இந்த நூல்களில் பலவும் இயற்றப்பட்டன என்ற உண்மையும் சிறப்பாக நினைத்துப் பார்க்க வேண்டியதாகும். (என்.வி. கிருஷ்ணவாரியர், அகம் கவிதைகள், கேரள சாகித்ய அகாதமி, 1981, பக்.27, 28)

பழந்தமிழ்ச் சங்க காலப் படைப்புகள் எனப்பெறும் பத்துப்பாட்டு, எட்டுத்தொகை ஆகியவற்றின் சமூகச் சூழல் நடை,பின்னணி ஆகியன தமிழ்நாட்டிற்கே உரிய தனித்தன்மை வாய்ந்தனவாகும். எனினும், இவை ஏனையவற்றில் இருந்து முற்றும் ஒதுங்கியவை அல்ல. (சாட்டர்சியின் திராவிடர் வரலாற்று மானுட மொழியியல் நோக்கு அனவயலாய்வு, மொ. ஆ: க.ப. அறவாணன்,பாரிநிலையம்,சென்னை, 1990, ப. 90)


ராஜராஜவர்மா
தமிழ் நாடும் மலையாள நாடும் ஒரே அரசனின் கீழ் அனைந்திருந்த காலம்வரை தமிழ் மொழியும் மலையாள மொழியும் ஒன்றாகவே இருந்தன. கேரளத்து நூற்களில் செந்தமிழிலிருந்து வேறுபட்ட சில வடிவங்களும் (ஒல்லார்) சொற்களும் (போத்து, பட்டி, கைய்நில முதலியவை) காணப்படாமலில்லை. ஆனால் அவைகளெல்லாம் வட்டார வழக்கு வேறுபாடுகள் என்றே கணக்கிடப்பட்டுள்ளன. சிலப்பதிகாரம் தமிழின் ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றாகத் தமிழர்களால் இன்றும் புகழப்பட்டு வருகின்றது. சோழ பாண்டிய நாடுகளைப் போன்று, மலைநாட்டையும் மூவரசரில் ஒருவர் ஆளுதல் என்ற முறைமை, பெருமாள்களின் ஆட்சிக் காலத்தோடு முடிவுற்றது. “கேரளோற்பத்தி” என்ற புராணநூலை நம்பினால்,பெருமாள்களும்கூட அரசப்பிரதிநிதிகளே தவிர அரசர்களல்லர். வரலாற்றுப்படி நோக்கினாலும் பெருமாள்கள் மூவரசர்களில் ஒருவரின் பிரதிநிதிகளாகவே இருக்கக்கூடும்.

கேரள மாநிலத்தின் மொழி மலையாளமாகும். பண்டைத் தமிழகத்தின் சேரநாடே இன்றைய கேரளம். இப்பகுதி தமிழ் நாட்டின் ஏனைய பகுதிகளிலிருந்து மலைகளாலும்குன்றுகளாலும் பிரிக்கப்பட்டது. காலப்போக்கில் சேரநாட்டுத்தமிழ் மலையாளமாக வளர்ந்து விட்டது. மலையாளமொழியிலக்கியம் பதினைந்தாம் நூற்றாண்டளவில் தொடங்குகிறது. (ஆ. வேலுப்பிள்ளை, தமிழ் வரலாற்றிலக்கணம், ப. 15

பழந்தமிழே இன்றைய கொடுமலையாளம். விளங்கக்கூறின் செந்தமிழே கொடுமலையாளம். இன்றைய தமிழ்மொழிச் சொற்களிற், பெரிதும் தூய்மையும், சீர்மையும் தொன்மையும் நேர்மையும் படைத்த நறுமணங்கமழ்ச் செந்தமிழ்ச் சொற்கள் மலையாள மொழியில் பல்கிக் கிடப்பதே தனிச் சான்றாகும். (க. ச. சங்கர ராமன், செந்தமிழ் கொடுமலையாளம், முன்னுரை.)

பண்டை கேரளத்தில் வழங்கி வந்த தமிழ் பிரதேச வழக்குநிலையை இலக்கியத்தில் ஏற்றிய காரணத்தாலும், மிதமிஞ்சிய வடமொழிக் கலப்பாலும் சிறிது சிறிதாகத் திரிந்த்து. கி. பி. 8-ம் நூற்றாண்டிற்குப் பின்னரும் தமிழ் மரபினின்றும் பெரிதும் பிறழாத பல இலக்கியங்கள் இங்குத் தோன்றியுள்ளன. தீயாட்டுப் பாட்டுக்கள், சர்ப்பப்பாட்டுக்கள், கிருஷிப் பாட்டுகள்,வள்ளப் பாட்டுக்கள், சாற்றுப் பாட்டுக்கள் முதலிய நாட்டுப் பாடல்கள் தோன்றின. இந்த முன்னேற்றத்தின் பயனே கி.பி. 14-ம் நூற்றாண்டில் எழுந்த “இராம சரிதம்” என்ற காப்பியமாகும்.கி. பி. 15-ம் நூற்றாண்டில் எழுந்த கிருஷ்ணகாதை, பாரத மாலை, கண்ணச ராமாயணம் முதலிய காவியங்களிலும் தமிழ் மரபிற்கு முதன்மை அளிக்கபட்டிருக்கின்றது என்று கூறப்படுகின்றது. இக்காவியங்களை இயற்றிய பெருங்கவிஞர்கள் தங்கள் நூற்களைத் “தமிழ் நூல்” என்றே குறிப்பிடுகின்றனர். ( லீலாதிலகம்)

பழஞ்சேர நாடே கேரள நாடாகும். கி.பி. 10ஆம் நூற்றாண்டிற்குப் பின்னர் மலையாளம் தனித்திளங்க ஆரம்பித்தது. நாஞ்சில் நாடு கேரள அரசின் கீழ் இருந்து வந்தது. இன்றும் பல மலையாளச் சொற்கள் நாஞ்சில் நாட்டுத் தமிழில் வழக்கில் உள்ளன. திராவிட மொழிகளில் தமிழும் மலையாளமும் மிக நெருங்கிய தொடர்புடையனவாகும். அவற்றை வேறுபடுத்தி அறிவதில் சில சிக்கல்கள் உண்டு. (சு. சக்திவேல், தமிழ்மொழி வரலாறு, ப. 303.)

பண்டைத் தமிழகத்தில் சேரநாட்டுச் சங்சத் தமிழாக விளங்கிக் கி.பி. 12ஆம் நூற்றாண்டளவில் பிரதேச வழக்கின் தனித்தன்மை காரணமாக மலைநாட்டுத் தமிழாகச் சிறிது திரிந்து, மிதமிஞ்சிய வடமொழிக் கலப்பால் கி.பி. 14ஆம் நூற்றாண்டளவில் மலையாண்மையாக மாறி இன்று தனி மொழியாக விளங்குகின்றது மலையாளம். இம்மாற்றத்தின் அடிப்படை பற்றிய உண்மையை நம்முன்னோர் நூற்களில் காண்கிறோம். ( மா. இளையபெருமாள், தொல்காப்பியமும் மலையாளமும், ப. 203.)

தமிழ் வளர்த்த திறத்தில் சேரவேந்தர் எவ்வரசர்க்கும் குறைந்தவர் அல்லர். ஏனைத் தமிழரசரைப்பற்றி அமைந்த சங்கச் செய்யுட்களின் அளவிலும், சேரரைப்பற்றி பாடல்களின் தொகை மிகஅதிகமாக்க் காணப்படுவதும், சேரவேந்தர்கள் பாடிய செய்யுட்களின் தொகையும் அவ்வாறே மிகுதிப்பட்டிருத்தலும் ஈண்டுச் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கவை. (மு. ராகவையங்கார், சேரவேந்தர் செய்யுட்கோவை, முதல் தொகுதி, ப.1)


சங்க காலச் செய்திகள் வட மலையாள நாட்டில் இன்றும் சில மாறுபாடுகளோடு கர்ணபரம்பரைச் செய்திகளாகவும், கதைகளாகவும் நிலவுகின்றன. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்திய சில செய்திகள் இன்னும் நாட்டார் மரபில் நிலைத்து நிற்கிறது. (நா.வானமாமலை, ஆராய்ச்சி காலாண்டிதழ், மலர்-5,1975.)

தற்காலம் மலையாள நாட்டில் வேலன்மார் என்ற இனத்தினர் செய்யும் தெய்வ ஆட்டங்களிலும் தெய்வத்தைச் சாந்தி செய்யும் சடங்குகளிலும் சங்ககாலத் தமிழகத்தில் நடந்த வெலன் வெறியாட்டத்தின் வழிபாட்டு முறைகள், மரபுகள் காணப்படுகின்றன. வேலன் வெறயாட்டம் தமிழத்தில் மறைந்து போத மலையாள நாட்டில் எஞ்சியிருப்பது மிகவும் வியப்புக்குரிய தாகும். (பி.எல். சாமி, மலையாள நாட்டில் வேலம் ஆட்டம், வ. சுப்பையா பிள்ளை பவளவிழா மலர், 1973.)

அகம், புறம், நற்றிணை, குறுந்தொகை,பதிற்றுப்பத்து,மலைபடுகடாஅம் – நன்னன் ஆண்ட நாடு ஏழில் மலை. தற்போது வட மலையாள பாமர மக்களிடையே ஏழுமலை, ஏழி மலா என்று வழங்கப்படுகிறது.

மலையாள மொழியின் தொடக்க நிலையில் உருத்திரியாத தமிழ்ச் சொற்கள் பலவும் உருத்திர்ந்தன சிலவும் வழங்கிவந்தன. இவ்வுருத்திரிபும் பெரும்பாலும் நாட்டின் இயற்கையமைதிக்கேற்ப மெல்லோசை தருதற்பொருட்டே நிகழ்ந்தது. பின்னர் மலையாளமொழி, தெலுங்கு, கன்னடம் முதலியவற்றைப் போல, வடமொழியோடு நெருங்கிய உறவு கொள்ளத் தொடங்கிற்று. வடமொழிச் சொற்கள் மிகுதியாக மலையாளத்தில் புகுந்தன. மிருது, கோஷம், முதலிய வடமொரியொலிகள் மேற்கொள்ளப்பட்டன. இத்தொடர்பினால் மலையாளம் தனது பூர்வ நிலையிலிருந்து பெரிதும் வேறுபாடு அடைந்தது. ஆயினும் அதற்குத் தமிழ்மொழியின் தொடர்பை முற்றிலும் அறுத்துக் கொள்ள முடியவில்லை. இன்றும் மலையாளமொழி தமிழர்க்கும், தமிழ்மொழி மலையாளிகட்கும் எளிதில் அறிந்து கொள்ளக் கூடியனவாகவே உள்ளன. ( வையாபுரிப்பிள்ளை, தமிழும் மலையாளமும், தமிழின் மறுமலர்ச்சி, பக். 266,267.)

மலையாளத்தில் சங்க இலக்கிய வாசிப்புகள் –


வையாபுரிப்பிள்ளை
பி.எல். சாமி
(நா.வானமாமலை
மு. ராகவையங்கார்
மா. இளையபெருமாள்
(சு. சக்திவேல்
க. ச. சங்கர ராமன்
ஆ. வேலுப்பிள்ளை
பி. கே. பரமேச்வரன் நாயர்
செல்லன் கோவிந்தன்
கே.கே. சுந்தசோபிதராஜ்
கி. நாச்சிமுத்து
ஜெயமோகன்
செ.வை. சண்முகம்
ப. பத்மனாபன் தம்பி ஜார்ஜ் எல். ஹார்ட் க. லதா, க. சுப்பிரமணியன் ம. இராசமாணிக்கனார் அ.கி. பரந்தாமனார், மயிலை சீனி. வேங்களசாமி, வ. வினாயகப் பெருமாள், க.த. திருநாவுக்கரசு, ரா.பி. சேதுபிள்ளை

1 comment:

  1. வாழ்த்துக்கள். முயற்சியுடையோர் இகழ்ச்சி அடையார்!

    ReplyDelete